வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:28 PM IST (Updated: 7 Oct 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

தேனி: 

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான கார்த்திக் தலைமை தாங்கினார். 

மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார். வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். 

மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். 

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கெங்குவார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story