கொரோனாவுக்கு 2 முதியவர்கள் சாவு-பலி எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு


கொரோனாவுக்கு 2 முதியவர்கள் சாவு-பலி எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 11:34 PM IST (Updated: 7 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர். இதனால் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:
47 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 488 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்து உள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 50 ஆயிரத்து 923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 924 ஆக அதிகரித்தது.
576 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 984 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 918 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 576 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story