நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி-4 பேர் படுகாயம்


நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி-4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:34 PM IST (Updated: 7 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே கார் கவிழ்ந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்:
கார் கவிழ்ந்தது
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பங்காருபாளையம் பகுதியை சேர்ந்தவர் தரணிகுமார் (வயது 32). இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவரும், இவருடைய நண்பர்கள் ஜம்பேர் (32), ஆனந்தன் (33), மோகன்ராஜ் (32), நித்தியாஸ் (33) ஆகிய 4 பேரும் கரூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்து கொண்டிருந்தனர்.
காரை மோகன்ராஜ் ஓட்டி வந்தார். இந்த கார் நேற்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
என்ஜினீயர் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தரணிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 4 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாலையின் குறுக்கே சென்ற நபர் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story