தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து


தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 7 Oct 2021 11:49 PM IST (Updated: 7 Oct 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.7 லட்சம் சூடுபடுத்தும் கலன் மற்றும் தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது.

காங்கேயம்
காங்கேயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.7 லட்சம் சூடுபடுத்தும் கலன் மற்றும் தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது. 
தேங்காய் எண்ணெய் ஆலை
காங்கேயத்தை அடுத்த முத்துக்காளிவலசு பகுதியை சேர்ந்த சபரி. இவருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆலை அந்த பகுதியில் உள்ளது.  இந்த ஆலையில் தேங்காய் பருப்பில் இருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில்  நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5.30 மணியளவில் ஆலையின் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் அதிக சூட்டின் காரணமாக புகை வந்தது. பின்னர் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.  இதுகுறித்து உடனே காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கலன் எரிந்து நாசம்
தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகன ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து  தீயை அணைக்க போராடினர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள சூடுபடுத்தும் கலன் மற்றும் பருப்புகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Next Story