கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்க கோரிக்கை


கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2021 12:17 AM IST (Updated: 8 Oct 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகரில் வ.உ.சி வீதியில் நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி
உடுமலை நகரில் வ.உ.சி வீதியில் நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 கழிவுநீர் கால்வாய்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி மற்றும் கச்சேரி வீதியில் கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து விட்டது. இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. 
அதைத் தொடர்ந்து பழைய கால்வாயை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வ.உ.சி மற்றும் கச்சேரி வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் இணைப்பு சாலை சந்திப்பில் உள்ள தரைமட்ட பாலம் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர தேவைக்காக அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாதலால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 
விரைந்து முடிக்க கோரிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் இணைப்பு சாலை சந்திப்பில் உள்ள தரைமட்ட பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுகிறது. அத்துடன் நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 
மேலும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவது குறித்த அறிவிப்பு பதாகையும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி திரும்பிச்சென்று ஆஸ்பத்திரியை அடைவதில் நீண்டநேரம் ஆகிவிடுகிறது. இதனால் நோயாளிகள் அவசரகால உதவியைப் பெற முடியாமல் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே அரசு ஆஸ்பத்திரி அருகே நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அத்துடன் காலதாமதமின்றி ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆஸ்பத்திரியை அடைவதற்கு ஏதுவாக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். மேலும் வ.உ.சி மற்றும் கச்சேரி வீதியின் நுழைவு வாயிலில் பணிகள் நடைபெறுவது குறித்த அறிவிப்பு பதாகையும் வைக்க வேண்டும்.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story