மராட்டியத்தில் பிரமாண்ட கொரோனா தடுப்பூசி முகாம்
மராட்டியத்தில் பிரமாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு வாரம் நடக்க உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பிரமாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு வாரம் நடக்க உள்ளது.
மத்திய அரசு இலக்கு
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மராட்டியத்தில் ஆரம்பம் முதலே தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. தலைநகர் மும்பையில் பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மராட்டியத்தில் பிரமாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
இந்த மாதம் 15-ந் தேதிக்குள் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மந்தாவியா என்னிடம் பேசினார். அப்போது அவர் மராட்டியத்தில் தடுப்பூசி முகாம் பெரிய அளவில் நடக்க வேண்டும், தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தார்.
தினமும் 15 லட்சம் பேர்
இதையடுத்து 8-ந் தேதி (இன்று) முதல் 14-ந் தேதி வரை பிரமாண்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம் தினந்தோறும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளோம். இதற்கு முன் ஒரே நாளில் 15.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம். மராட்டியத்தில் 6 கோடி பேர் முதல் டோஸ் போட்டுவிட்டனர். இன்னும் 3.20 கோடி பேரும் தடுப்பூசி போட வேண்டும். இதேபோல 2½ கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story