மாவட்ட செய்திகள்

பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை + "||" + leave

பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை

பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை
சிவகாசி, வெம்பக்கோட்டையில் பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், 
சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தாலுகாவில் நாளை (சனிக்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி 2 தாலுகாக்களிலும் செயல்பட்டு வரும் தீப்பெட்டி, பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மேற்படி 2 தாலுகாக்களிலும் செயல்பட்டு வரும் அனைத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசுஆலைகளுக்கு வாக்குப்பதிவு நாளான நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை தினமாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரால் அறிவிக்கப்படுகிறது. மேற்படி அறிவிப்பை மீறி சாத்தூர், வெம்பக்கோட்டை தாலுகாக்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி அத்தகைய தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர் குழப்பம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
4. தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கர்நாடகாவின் பெங்களூருவில் தொடர்மழையை முன்னிட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கனமழை: சென்னை உள்பட 8 மாவட்டங்கள், கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மயிலாடுதுறை உள்பட 8 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.