பள்ளிக்கூட ஆசிரியர் மர்மசாவு
பள்ளிக்கூட ஆசிரியர் மர்மசாவு
கெங்கவல்லி, அக்.8-
கெங்கவல்லியில் பள்ளிக்கூட ஆசிரியர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கூட ஆசிரியர்
கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முத்துராசு (வயது 33). இவர் தம்மம்பட்டி அருகே மங்கபட்டி பகுதியிலில் வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என்று கூறி சக ஆசிரியரிடம் கூறிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் நீண்டநேரம் ஆகியும் முத்துராசு வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.
வீட்டுக்குள் பிணம்
வீட்டின் உரிமையாளர் வந்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பாத்ரூமில் முத்துராசு பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் விரைந்து வந்து முத்துராசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மமான முறையில் பள்ளிக்கூட ஆசிரியர் இறந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story