விசாரணைக்கு ஆஜராகாத எச்.ராஜாவுக்கு பிடிவாரண்டு

விசாரணைக்கு ஆஜராகாத எச்.ராஜாவுக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 8 Oct 2021 2:12 AM IST (Updated: 8 Oct 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ெதாடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ெதாடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
பொதுக்கூட்டம்
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, கடந்த 17.9.2018 அன்று வேடச்சந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துணை ஆணையர் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள, 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு) நடைபெற்று வந்தது. 
பிடிவாரண்டு
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி பரம்வீர், எச்.ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

Next Story