மாணவியை காரில் கடத்திய காதலன் உள்பட 2 பேர் கைது


மாணவியை காரில் கடத்திய காதலன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2021 2:24 AM IST (Updated: 8 Oct 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பிளஸ்-2 மாணவியை காரில் கடத்திய காதன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

கடலூர் குண்டுஉப்பலவாடியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் சோமலாபுரத்தை சேர்ந்த தனஞ்செயன் மகன் சரத் (வயது 20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். 
இந்நிலையில் சரத் நேற்று மதியம் திருப்பத்தூரில் இருந்து தனது நண்பரான கெஜராஜ் மகன் சதீஷ்குமார் (32) என்பவருடன் காரில் கடலூருக்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் குண்டுஉப்பலவாடிக்கு சென்று அங்கு வீட்டுக்கு வெளியே நின்ற பிளஸ்-2 மாணவியை காரில் கடத்திச்சென்றனர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அந்த காரை மடக்கினர்.

2 பேர் கைது 

பின்னர் அந்த காரில் இருந்த அவர்களை பிடித்து தேவனாம்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இது பற்றி மாணவியின் தாய் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்திய சரத், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மாணவி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

Next Story