வாலிபருக்கு கத்திக்குத்து: தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது


வாலிபருக்கு கத்திக்குத்து: தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2021 2:56 AM IST (Updated: 8 Oct 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

நெல்லை:
மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கடா காஜா (வயது 35), ரம்ஜான் கனி (27). மேலமுன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் சிவமுருகன் (30). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ரம்ஜான் கனியின் தந்தை ஷேக்கும் (48) தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரம்ஜான் கனி உள்ளிட்ட 3 பேரும், கடா காஜாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்ஜான் கனி, ஷேக், சிவமுருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story