கூடலூரில் இருந்து குமுளிக்கு மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது 15 கிலோ பறிமுதல்


கூடலூரில் இருந்து குமுளிக்கு மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது 15 கிலோ பறிமுதல்
x
தினத்தந்தி 8 Oct 2021 5:46 PM IST (Updated: 8 Oct 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இருந்து குமுளிக்கு மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வடக்கு அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர் அப்போது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். 
அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் 15 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் கூடலூர் 1-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வமணி (வயது 37), சிவகாமன் (35) என்பதும், கூடலூரில் இருந்து குமுளிக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story