திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; நயினார் நாகநே்திரன் உள்பட 350 பேர் மீது வழக்கு
திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் பா.ஜனதா சார்பில் கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் 40 பெண்கள் உள்பட 350 பா.ஜனதாவினர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story