டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2021 7:39 PM IST (Updated: 8 Oct 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
திருச்செந்தூரில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சோதனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்தவாரம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.28 ஆயிரத்து 280 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் மகேந்திரன், மந்திரவேல், லட்சுமணன், விற்பனையாளர்கள் அற்புதராஜ், முருகன், சிவக்குமார், உதவி விற்பனையாளர்கள் சுதாகர் சாமுவேல், சுப்பையா ஆகிய 8 பேரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் உத்தரவிட்டார்.

Next Story