மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி திருட்டு


மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2021 7:49 PM IST (Updated: 8 Oct 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாசரேத்:
நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலியை திருடிய இளம்பெண்ணை போலீசார் தேடி  வருகின்றனர்.

மூதாட்டி

உடன்குடி அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ். அவரது மனைவி ஜெயா (வயது 80). இவர் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். இவரது சீட்டிற்கு பின்புறம் உள்ள சீட்டில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஜெயாவிடம், உங்கள் சங்கிலி கழன்று விடுவது போல் உள்ளது, எனவே அதை எடுத்து பத்திரமாக பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

சங்கிலி அபேஸ் 

உடனே ஜெயா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை கழட்டி தனது கைப்பையில் வைத்துள்ளார். இதனிடையே பஸ் நாசரேத் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஜெயா தனது கைப்பையை பார்த்துள்ளார். அந்த பையில் பிளேடால் வெட்டி அதில் வைத்திருந்த 3 பவுன் சங்கிலி திருடப்பட்டது ஜெயாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா தனது பின்சீட்டில் இருந்த அந்த மர்ம பெண்ணை பார்த்துள்ளார். அந்தப் பெண் மாயமாகி விட்டார்.

மர்மப்பெண்ணுக்கு வலைவீச்சு 

அவர் முந்தைய பஸ் ஸ்டாப்பில் இறங்கி சென்று விட்டதாக தெரிந்தது. இதுகுறித்து ஜெயா நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story