திருவெண்ணெய்நல்லூா் அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி வழியாக சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்ற அவலம்


திருவெண்ணெய்நல்லூா் அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி வழியாக சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்ற அவலம்
x
தினத்தந்தி 8 Oct 2021 9:53 PM IST (Updated: 8 Oct 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூா் அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி வழியாக சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தொட்டிமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு இல்லாததால் ஆனத்தூர் ஏரிக்கரையை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுடுகாட்டுக்கு சென்று வர போதிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(வயது 78) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். உறவினர்களின் இறுதி மரியாதைக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் ஏரிக்கரையில் அடக்கம் செய்வதற்கு வயல்வெளி மற்றும் கொய்யா தோப்பு வழியாக 1½ கிலோ மீட்டர் தூரம் மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்று ஏரிக்கரையில் அடக்கம் செய்தனர்.

இது குறித்து தொட்டிமேடு கிராமமக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்துக்கென்று தனி சுடுகாடு, சுடுகாட்டுக்கு சென்று வர பாதை வசதி கேட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களின் மனவேதனையை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தனியாக சுடுகாடு மற்றும் பாதை அமைத்து தர நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றனர். 

Next Story