வீராணம் ஏரிக்கரையில் குழந்தை பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: சிறுமியை தாயாக்கிய சித்தப்பா கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை


வீராணம் ஏரிக்கரையில் குழந்தை பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: சிறுமியை தாயாக்கிய சித்தப்பா கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2021 9:58 PM IST (Updated: 8 Oct 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரிக்கரையில் குழந்தை பிணமாக கிடந்த வழக்கில் திடீா் திருப்பமாக சிறுமியை தாயாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேத்தியாத்தோப்பு, 

அண்ணன் மகள்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி வீராணம் ஏரிக்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழத்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 36 வயதுடைய திருமணமான கமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்த தனது அண்ணன் மகளான 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஓராண்டாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

சித்தப்பா கைது

இதில் கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கமல், ஆலோசனைப்படி இறந்த பெண் குழந்தையின் உடலை அந்த சிறுமி வீராணம் ஏரிக்கரையில் வீசிச் சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கமலை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக தனது அண்ணன் மகளான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story