விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:23 PM IST (Updated: 8 Oct 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

நிலக்கோட்டை: 

நிலக்கோட்டை அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கணவரிடம் கோபித்து கொண்டு தனலட்சுமி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து மனைவியை அழைத்து வர தங்கப்பாண்டி அங்கு சென்றார். அப்போது அவரை மாமனார் முருகன், மைத்துனர் கார்த்திக் ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த தங்கப்பாண்டி விஷம் குடித்து, நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பிரிவு பகுதியில் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதுகுறித்து தங்கப்பாண்டி தந்தை பழனிசாமி நிலக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகன், கார்த்திக் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story