தபால் வாக்கு வேண்டி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
தபால் வாக்கு வேண்டி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
ஆற்காடு
-
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பங்களை தேர்தலுக்கு முன்பாக பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த நிலையில் தபால் வாக்கு படிவங்களை ஏற்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் திமிரி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாஜலம் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் தகவல் தெரிவிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story