பொன்னை ஆறு மற்றும் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பொன்னை ஆறு மற்றும் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:32 PM IST (Updated: 8 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

பொன்னை ஆறு மற்றும் பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன், மீட்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

பொன்னை ஆறு மற்றும் பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன், மீட்கப்பட்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையிலிருந்து பொன்னை ஆற்றுக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

எனவே பொன்னையாறு மற்றும் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தண்டோரா மூலம் தகவல் அளிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.

தந்தை, மகன் மீட்பு

இந்தநிலையில் திருவலம் அருகே உள்ள வெப்பாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (60) என்பவர் வெப்பாலை அருகே பொன்னை ஆற்றின் மையப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த வெள்ளத்தில் முதிவரும் அவரது மகனும் சிக்கிக்கொண்டனர். ஆடுகளும் சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் சென்ற தீயணைப்பு மீட்புக் குழுவினர் ஆற்றில் இறங்கி,  ஜெயசீலனையும், அவரது மகனையும் மீட்டனர். 10 ஆடுகளும் மீட்கப்பட்டது. மேல்பாடி போலீசாரும் மீட்புப் பணியில் உதவினார்கள்.

Next Story