அஞ்செட்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது கட்டி வைத்து தாக்கியதாக 2 பேர் சிக்கினர்
அஞ்செட்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை கட்டி வைத்து தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை கட்டி வைத்து தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பதிகவுண்டனூர் காலனியை சேர்ந்த தொழிலாளி கோட்டையன் (வயது35) என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாருக்கு கோட்டையன் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் கோட்டையனை கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் இந்த வழக்கில் போக்சோ பிரிவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
முன்னதாக ராஜ்குமாரை சேசுராஜபுரத்தை சேர்ந்த புஷ்பராஜ் (36) கடந்த 3-ந் தேதி செல்போனில் அழைத்தார். அப்போது அங்கு சென்ற ராஜ்குமாரை புஷ்பராஜ், அட்டப்பள்ளம் பிச்சை பெருமாள் (27), ஆரோக்கியபுரம் குழந்தை ஏசு, மஞ்சுமலை வீரமணி ஆகியோர் சேர்ந்து கட்டி வைத்து தாக்கி, சாதி பெயரை கூறி திட்டினார்கள். மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் புஷ்பராஜ், பிச்சை பெருமாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை ஏசு, வீரமணி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story