வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பள்ளி மாணவி
குத்தாலம் அருகே வாய்க்காலில் மர்மமான முறையில் பள்ளி மாணவி இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே வாய்க்காலில் மர்மமான முறையில் பள்ளி மாணவி இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி மர்மச்சாவு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஒரு ஊரைச்சேர்ந்த 13 வயதான மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக தாயாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த மாணவி அவரது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மாணவி அணிந்திருந்த பேண்ட் கிழிந்து இருந்தது. அதில் ரத்த கறையும் இருந்தது. தங்களது மகளை அந்த கோலத்தில் பார்த்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
கொலையாபோலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் வந்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்க்காலில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் சாலை மறியல்
இதை தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வீட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அஞ்சாறுவார்த்தலை பகுதியில் சென்ற போது மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஆம்புலன்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரண மானவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இகுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story