சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்
சம்பா பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பயிர் இழப்பீடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2021-22 செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சம்பா பருவ நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.472 கட்டணமாக செலுத்த வேண்டும். அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயிகள் பெயர், விலாசம், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story