மாவட்ட செய்திகள்

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி + "||" + Worker killed by electric shock

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவரது மகன் கார்த்தி (வயது 32), கட்டிட தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கார்த்தி கள்ளூர் ஜெமினி நகர் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளை அங்கிருந்த வீட்டின் ஓரமாக நிறுத்தி உள்ளார். அப்போது வீட்டின் வெளியே இருந்த செட்டின் இருந்த பைப்பின் மீது கார்த்தி கை வைத்துள்ளார் இதில்  மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கார்த்தி மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காரைக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
2. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
3. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.
4. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.