நாடக கலைஞர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
நாடக கலைஞர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கரூர்
விழிப்புணர்வு
கரூர் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரூர் மாவட்டம் முழுவதும் 5-ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடா, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
கடவுள் வேடமணிந்து விழிப்புணர்வு
இதில், பரமசிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் உள்ளிட்ட கடவுள்களின் வேடம் அணிந்த நாடகக் கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து நடந்த விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
குளித்தலை
குளித்தலையில் வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடந்தும், இருசக்கர வாகனங்களில் பயணித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதுபோல காவல் தெய்வங்கள் வேடமணிந்து கலை குழுவினரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் தாலுகா வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரானா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சந்தியா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடாங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
Related Tags :
Next Story