மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ தொட்டது
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.110-ஐ தொட்டு இருக்கிறது. டீசல் விலை சதம் அடிக்க தயாராகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.110-ஐ தொட்டு இருக்கிறது. டீசல் விலை சதம் அடிக்க தயாராகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதிலும் பெட்ரோலை விட டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே சென்றது.
தொடர்ந்து விலை அதிகரித்து வந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து காணப்பட்டது. விலை குறைந்துவிட்டது என வாகன ஓட்டிகள் சற்று பெருமூச்சு விட்ட நேரத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதன் விலை கிடுகிடுவென ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் ஏற்றத்துடனேயே பெட்ரோல், டீசல் விலை இருந்தது.
ரூ.110-ஐ தொட்டது
அதன்படி, மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தொட்டது. அதாவது ரூ.109.54-க்கு விற்பனை செய்யப்பட்டது.
டீசல் விலை சதம் அடிக்க தயார் ஆனது. அதாவது ஒரு லிட்டர் டீசல் ரூ.99.92 ஆக விற்பனை ஆனது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை உயருவதாக கூறப்படும் அதே வேளையில், கடந்த 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 143 டாலருக்கு விற்பனை ஆனபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.49-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விற்பனை செய்யும் நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story