ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2021 1:15 AM IST (Updated: 9 Oct 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் வினியோகத்தில் கைரேகை முறையை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிக்க அந்தந்த ரேஷன் கடைகளில் செயல்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்திர தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச் செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அதேபோல அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் பலியான சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் கழக செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பூங்கோதை, பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ், ஒன்றியக்குழு செயலாளர் கணேசன், உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story