சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் ேதரோட்டம்


சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் ேதரோட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2021 1:25 AM IST (Updated: 9 Oct 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் ேதரோட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று நாட்டாண்மைகள் மூக்கையா நாடார், காமராஜ் நாடார், சேகர் நாடார், சுப்பிரமணியன் நாடார், ஞானப்பழம் நாடார் ஆகியோர் தலைமையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ேகாவிலில் இருந்து தேர் புறப்படும் போது ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், யூனியன் தலைவர் சிங்கராஜ், ஏ.கே.ஆர். பிரிக்ஸ் உரிமையாளர்கள் தொழிலதிபர் காமராஜ், ராஜ்பிரியம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரை பொதுமக்கள் ஏராளமானோர்  வடம்பிடித்து இழுத்து ஊரை சுற்றி இழுத்து வந்தனர். பின்னர் தேர் கோவிலை வந்தடைந்தது. விழாவிற்கான  ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story