தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், தொட்டியம் பண்ணைவீடு அருகில் வேருடன் சாய்ந்த ஆலமரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு அதன் அடிப்பாகம் மட்டும் சாலையோரத்தில் அப்படியே கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். இதனை தடுக்க மரத்தில் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரத்தில் ஒளிரும் பட்டையை பொருத்தினர். இதற்காக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமம் அவுலியா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவுலியா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அ.முகமது ரிஸ்வான், கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை.
சரி செய்யப்படாத முறிந்த மின்கம்பம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் செங்காமுனியார் கோவில் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரவு நேரத்தில் செல்லும் வகையில், அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முறிந்து விழுந்துவிட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்திற்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இரவு நேரத்தில் கோவிலுக்கு செல்லும் வகையில் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ப.ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி
அரியலூர் மருத்துவமனை சாலை, முருகன் வால்பட்டறை பின்புறம் உள்ள சாலைகளில் கற்கள் கொட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணி நடந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னமும் தார் ஊற்றாததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சீ.சிற்றரசன், அரியலூர்.
குண்டும், குழியுமான தார்ச்சாலை
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூரில் இருந்து நச்சலூர் செல்லும் தார்ச்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இனுங்கூர், கரூர்.
பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
திருச்சி மாவட்டம், சாத்தனூர் கிழக்கு 37-வது வார்டு உடையாம்பட்டி ரெயில்வே கேட் அருகே பெண்களுக்கான பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பயன்பாடு இன்றி மூடி கிடப்பதால் அப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காசிராஜன், சாத்தனூர், திருச்சி.
குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் கல்லக்குடி பேரூராட்சியில் உள்ள சிவன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபா, கல்லக்குடி, திருச்சி.
கீழே விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, எண்ணை கிராமம்
பட்டியான்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதன் தூண்கள் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எண்ணை, புதுக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், எடமலைபட்டிபுதூா், அஞ்சல்காரன்தோப்பு இரண்டாம் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் அப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அஞ்சல்காரன்தோப்பு, திருச்சி.
வயலில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் செவதலிங்கபுரம் ஊராட்சி மாங்கரை பேட்டையில் உள்ள மின்மாற்றி வயலின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி மின்மாற்றியில் பழுது ஏற்படும் போது அதை சரி செய்ய மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்த மின்மாற்றியை மேடான பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசோக்குமார், மாங்கரை பேட்டை, திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம் உறையூர் குழுமணி ரோடு மேல பாண்டமங்கலம் பகுதியில் வாடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதிளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
செந்தில்குமார், மேல பாண்டமங்கலம், திருச்சி.
குண்டும், குழியுமான தார் சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்சிலியில் இருந்து திருவெள்ளறை செல்லும் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி சாலையில் பள்ளம் இருப்பது தெரியாதததுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவெள்ளறை, திருச்சி.
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பழங்கனாங்குடி வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் கடந்த சில வாரமாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சீனிவாசன், பழங்கனாங்குடி, திருச்சி.
Related Tags :
Next Story