பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணி தீவிரம்
ஆலங்குளம் பகுதியில் பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பருத்தி சாகுபடி
ஆலங்குளம், முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, உப்பு பட்டி, மாதாங்கோவில்பட்டி, கல்லம நாயக்கர்பட்டி, புளியடிபட்டி, கோபாலபுரம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, வலையபட்டி, மேலாண் மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, அருணாசலபுரம், கண்மாய்பட்டி, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யபட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழையால் பருத்தி செடி நன்றாக வளர்ந்து உள்ளது. அதேபோல களையும் முளைத்து உள்ளதால் அதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
களை எடுக்கும் பணி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பருத்தி நன்றாக வளர்ந்துள்ளது.
எந்த அளவிற்கு செடியின் வளர்ச்சி இருக்கிறதோ அதே அளவிற்கு களைகளும் முளைத்து உள்ளன. களைகளை அகற்றினால் செடிகள் நன்றாக வளரும். எனவே களைகளை அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. வெளியூரில் ஆட்களை பிடித்து டிராக்டரில் கொண்டு வந்து களை எடுக்கும் பணியை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story