தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் உமையாள்புரம் ஊராட்சி அண்டக்குடி கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கடந்த 10 நாட்களாக மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் நியாய விலைக்கடை, கோவில் போன்ற இடங்களுக்கு சென்று வர வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி தொற்றுநோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், உமையாள்புரம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் கிராமத்தில் முகப்பு பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது இந்த பகுதியை நடந்து செல்லும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி சாக்கடை போல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. மேலும் பன்றிகளின் வசிப்பிடமாக மாறி சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-அ.சம்பத்குமார், பசுபதிகோவில்.
Related Tags :
Next Story