தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 Oct 2021 1:39 AM IST (Updated: 9 Oct 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர். 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). கூலி தொழிலாளி. கடந்த 28-11-2014 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். 
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், பால்ராஜூவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story