ஒரே நாளில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
ஒரே நாளில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்(பொ) காமாட்சி கணேசன், நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதாரத்துறை மூலம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதுவரை ராமநாதபுரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் உட்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 398 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மீண்டும் ஒரு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தற்சமயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 80,000 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும். எனவே .நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும், 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அப்போது கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story