தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 2:48 AM IST (Updated: 9 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சேலம்:
தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொழிலாளி கொலை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பள்ளத்தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தன் (வயது 28). பள்ளத்தாதனூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் கண்மணி (32), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி ஜீவானந்தத்தை சந்தித்து, அவருடைய தோட்டத்தில் வேலை செய்ததற்கான கூலி தொகையை கேட்டார்.
அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து அன்று மாலையே ஜீவானந்தன், கண்மணி ஆகிய இருவரும் பேளூர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து மது அருந்தினர். அப்போது கண்மணியின் தலையில் கல்லை போட்டு ஜீவானந்தன் கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதாவது, தொழிலாளியை கொலை செய்த குற்றத்திற்காக ஜீவனாந்தத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பு அளித்தார்.

Next Story