கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி ‘திடீர்’ நிறுத்தம்


கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி ‘திடீர்’ நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Oct 2021 3:22 AM IST (Updated: 9 Oct 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி ‘திடீர்’ நிறுத்தம்

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12.10 மணிக்கு திடீரென டர்பனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
டர்பனில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Next Story