வேளச்சேரியில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் சங்கிலி பறிப்பு


வேளச்சேரியில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:14 AM IST (Updated: 9 Oct 2021 8:14 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரியில் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் அகிலா (வயது 30). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தரமணி 100 அடி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

வேளச்சேரி அருகே அவர் வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அகிலா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்.

Next Story