சிறுகிராமம் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.1000 பரிசு கூப்பன் வழங்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது
கைது
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டுக்குட்பட்ட நத்தம், சிறுகிராமம், குடுமியான்குப்பம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
அப்போது சிறுகிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ரூ.1000 மதிப்புள்ள பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறுகிராமம் வாக்குச்சாவடி மையத்துக்கு விரைந்து சென்று, வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு சேகரித்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தனசேகர் (வயது 45) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story