மீண்டும் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 51,118 ஆக அதிகரிப்பு


மீண்டும் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 51,118 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:34 PM IST (Updated: 9 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
74 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 44 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 118 ஆக அதிகரித்து உள்ளது.
மீண்டும் அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று 56 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 25 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 603 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அதாவது கடந்த 7-ந் தேதி 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
முககவசம்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

Next Story