திடீர் மழையால் தண்ணீர் ஒழுகிய வாக்குச்சாவடி மேற்கூரைக்கு தார்ப்பாய் போட்டு மூடல்


திடீர் மழையால் தண்ணீர் ஒழுகிய வாக்குச்சாவடி மேற்கூரைக்கு  தார்ப்பாய் போட்டு மூடல்
x
தினத்தந்தி 9 Oct 2021 11:49 PM IST (Updated: 9 Oct 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மேற்கூரைக்கு தார்ப்பாய் போட்டு மூடல்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.  வாக்குப்பதிவு நடந்த சில வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் சரியில்லாததால் வாக்காளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். பாப்பனப்பள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அந்த பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் மழை நீர் வாக்குச்சாவடிக்குள் ஒழுகத் தொடங்கியது. அதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக கூரை மீது தார்ப்பாய் போட்டு மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்பேரில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு கூரையின் மீது தார்பாய் போட்டு மூடப்பட்டது. இதேபோல் பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வாக்காளர்கள் பெரும் அவதிப்பட்டனர்.

Next Story