பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:53 PM IST (Updated: 9 Oct 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, அக்.10-
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி 4-வது சனிக்கிழமை 
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. 
நேற்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கனவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாளேகுளி அனுமந்தராய சாமி கோவில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் பெருமாள் சன்னதி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோவில்களுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வெளியில் இருந்தவாறு சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவநீத வேணுகோபால சாமி
கிருஷ்ணகிரி கிருஷ்ணன் கோவில் தெருவில் நவநீதவேணுகோபால சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொன்மலை சீனிவாச பெருமாள் புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி வைர கிரீட அலங்காரத்தில் காட்சி அளித்தார். கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை யொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மத்தூர்
 மத்தூர் அருகே தாதனூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடந்தது. முன்னதாக மேல் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கோடியூர் கணேசன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
மத்தூர் ஒன்றியம் ஆனந்தூரில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மேல் விளக்கு ஏற்றப்பட்டது. விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 3 மணி அளவில் ஆனந்தூரின் முக்கிய வீதிகளில் மங்கள இசை, மேளதாளங்கள் வாணவேடிக்கையுடன் கருடசேவை  நடந்தது. பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் நடன நாட்டிய நிகழ்ச்சிகளுடன் வாண வேடிக்கையும் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story