மாவட்ட செய்திகள்

தேத்தாம்பட்டி கிராமத்தில்ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Public wait for the 2nd day demanding the construction of a bore well

தேத்தாம்பட்டி கிராமத்தில்ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

தேத்தாம்பட்டி கிராமத்தில்ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி, தேத்தாம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை 10 ஆண்டுகளாக குடித்து வந்தனர். இதனால் சிறுவர்கள் பற்களில் காரை படிதல், பெரியவர்களுக்கு சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமையில் உடனடியாக ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேத்தாம்பட்டி பொதுமக்கள் ஆழ்குழாய் கிணறு அமைக்க தேர்வு செய்த இடத்தில் உடனடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கான வேலைகளை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி செயலாளர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் நூதன போராட்டம்
மாணவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மணல் லாரிகள் முன்படுத்து கிராம மக்கள் போராட்டம்
மணல் லாரிகள் முன்படுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டிடம் கட்டுவதாக புகார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
குளித்தலை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டிடம் கட்டுவதாக புகார் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார்.
4. சாலையில் செடிகளை நட்டு போராட்டம்
சாலையில் செடிகளை நட்டு போராட்டம்
5. மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்