வாகன விதி மீறலில் ஈடுபட்ட 3,412 பேர் மீது வழக்கு


வாகன விதி மீறலில் ஈடுபட்ட 3,412 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Oct 2021 12:18 AM IST (Updated: 10 Oct 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 3,412 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 298 ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை, 
வாகன விதிமீறல்கள்
குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நாள்தோறும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வசூல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வாகன சோதனையில் 3 ஆயிரத்து 412 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு கூறியதாவது:-
ஓட்டுனர் உரிமம் ரத்து
குளித்தலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற வாகன சோதனையில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 3,412 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 69 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 298 பேர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story