சாலை மைய தடுப்பில் லாரி மோதல்
காங்கேயம் அருகே சாலை மைய தடுப்பில் லாரி மோதி விபத்துக்குக்குள்ளானது.
காங்கேயம்
காங்கேயம் அருகே சாலை மைய தடுப்பில் லாரி மோதி விபத்துக்குக்குள்ளானது.
லாரி மோதல்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திலிருந்து (பவர் பிளான்ட் பாகங்கள்) பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி சென்னிமலை - காங்கேயம் வழியாக வந்தது. லாரியை விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது40) ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நல்லிக்கவுண்டன் வலசு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென்று சாலையின் மைய தடுப்பில் மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது, மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார் இடர்பாடுகளை அகற்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரியை தூக்கி சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சேதமடைந்த சாலையின் மைய தடுப்பு இடிபாடுகளை அகற்றி, வாகன போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story