தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு


தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 7:57 PM GMT (Updated: 9 Oct 2021 7:57 PM GMT)

தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

துவரங்குறிச்சி, அக்.10-
மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில் போலீசார் பள்ளியின் கேட்டை மூடினர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர் 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாததால் அவர்களுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மற்ற வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க வலியுறுத்தினர். வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் இதுகுறித்து பதில் அளிக்காததால் தி.மு.க. வினர் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த அ.தி.மு.க.வினர் 5 மணிக்குப்பிறகு கொரோனா நோயாளிகள் தவிர மற்றவர்களை  அனுமதிக்கக் கூடாது எனக்கூறி அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தி.மு.க.வினரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் அதிவிரைவுப்படை போலீசார்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்து போக செய்தனர்.  இதற்கிடையே வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புடன் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

Next Story