மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் + "||" + Confiscation

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தளவாய்புரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தளவாய்புரம், 
சேத்தூர் அருகே சுந்தரராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவருக்கு சொந்தமான காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள இடையூரணி பகுதியில் உள்ளது. இவரது காட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக சேத்தூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி தலைமையில் போலீசார் குருசாமியின் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் சோதனை நடந்தது. அப்போது அங்கு திருட்டுத்தனமாக 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து குருசாமியை கைதுசெய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சரக்கு வாகனத்தில் கடத்திய 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
முதுகுளத்தூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
2. மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
3. கறம்பக்குடி அருகே கிராவல் மண் கடத்திய 4 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் 4 பேர் கைது
கிராவல் மண் கடத்திய 4 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
5. சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் சிறுவர்கள் ஓட்டி வந்த 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.