வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Oct 2021 2:05 AM IST (Updated: 10 Oct 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி பார்வதி (வயது 60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது மகள் கயல்விழி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய பார்வதி வீட்டு கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story