சாலையோரத்தில் கிடந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
சாலையோரத்தில் கிடந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே சாலையோரத்தில் நேற்று கிடந்த ஒரு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. யாரையும் கொலை செய்து மூட்டையில் கட்டி வைத்து இருக்கலாம் என்றும், அதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியினர் சந்தேகித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் மூட்டையை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது, அதில் இறந்த நாயின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அச்சத்தில் இருந்து விடுபட்டு சங்குபேட்டை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் போலீசார், நகராட்சி தூய்மை காவலர்களை கொண்டு இறந்த நாயை மூட்டையுடன் அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story