மழையால் வீட்டுச்சுவர் இடிந்தது


மழையால் வீட்டுச்சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 10 Oct 2021 3:27 AM IST (Updated: 10 Oct 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

மழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள பெண்ணக்கோணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மீரா(வயது 35). விவசாயக் கூலி தொழிலாளி. ெலப்பைக்குடிக்காடு, அகரம்சீகூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மீராவின் குடிசை வீட்டில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, இடிந்து விழுந்தது. அந்த சுவர் வீட்டின் வெளிப்பக்கத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் மீரா குடும்பத்தின் நிலையை அறிந்து, அவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்தனர்.

Next Story