கடையம் யூனியன் சிவசைலத்தில் மறுவாக்குப்பதிவு
சிவசைலத்தில் மறுவாக்குப்பதிவு
கடையம்:
கடையம் யூனியன் சிவசைலத்தில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
தேர்தல் அலுவலர்களால் குளறுபடி
தென்காசி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில் கடையம் யூனியனுக்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் 2, 3-வது வார்டு வாக்காளர்கள் வாக்களிக்க பொதுவான வாக்குச்சாவடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே, 2-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 6-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் தவறுதலாக 2-வது வார்டு வாக்காளர்களுக்கும் ஓட்டுச்சீட்டு வழங்கினர். 3-வது வார்டுக்கு 203 ஓட்டுகள் உள்ளதால் வாக்குப்பதிவு செய்யும்போது ஓட்டுச்சீட்டுகள் குறைந்தது. 2-வது வார்டை சேர்ந்த வாக்காளர்கள் 45 பேர் 3-வது வார்டு உறுப்பினருக்கு வாக்களித்தது கண்டறியப்பட்டது.
இந்த குளறுபடி குறித்து கடையம் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 9-ந் தேதி (நேற்று) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மறுவாக்குப்பதிவு
அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனர். இந்த வாக்குப்பதிவை தேர்தல் நடத்தும் அலுவலர் திலகராஜ் பார்வையிட்டார். வாக்குப்பதிவு முடிந்த உடன் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, கடையம் யூனியனுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தேர்தலைெயாட்டி கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாலை வரை நடந்த இந்த வாக்குப்பதிவில் மொத்தம் 80.79 சதவீதம் வாக்குகள் பதிவானது.
Related Tags :
Next Story