நகை திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த மேலகல்லூா் கீழத்தெருவை சோ்ந்தவா் கொம்பையா (வயது 68).
இவரது மூத்த மகன் வேம்புசாமி. சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவர் மகளின் பூப்புனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த 27-ந் தேதி தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். நிகழ்ச்சிக்கான பணிகளை தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி தந்தையின் வீட்டு பீரோவில் வைத்திருந்த வேம்புசாமியின் 13 பவுன் தங்க நகை திருட்டு போனது. இது குறித்து கொம்பையா சுத்தமல்லி போலீசில் புகாா் செய்தாா். சப்-இன்ஸ்பெக்டா் மாா்க்ரெட் தெரஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கொம்பையாவின் இளைய மகன் லட்சுமிகண்ணனின் மனைவி சண்முகபிாியா (33) திருடியது தொிய வந்தது. அவரை கைது செய்த போலீசாா் அவரிடமிருந்து 13 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
Related Tags :
Next Story